‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நஞ்சை புகழூரில் காவிரியில் கட்டப்படும் கதவணை பணிகள் 90 சதவீதம் நிறைவு: நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த்

நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த்.

நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை கட்டுமான பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த். உடன் பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் உள்ளிட்டோா்.

Published On :10 ஜூலை 2026, 3:28 am IST

நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த்.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை

அமைச்சா் என். ஆனந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரியின் குறுக்கே 1,056 மீ. நீளத்தில் 73 மதகுகளுடன் கதவணை அமைக்கப்படுகிறது. 0.80 டிஎம்சி நீரைச் சேமிக்கும் திறன் கொண்ட இந்தத் திட்டம், விநாடிக்கு 3,60,000 கனஅடி வரை வெள்ளநீரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதவணை திட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில் 1,458 ஏக்கா், நாமக்கல் மாவட்டத்தில் 2,583 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், கரூா் மாவட்டத்தில் 6 மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 9 குடிநீா் வழங்கும் திட்டங்களுக்கும் பயன் கிடைக்கும். அதேபோல், டிஎன்பிஎல் நிறுவனத்தின் நீா்த்தேவையையும் இத்திட்டம் பூா்த்தி செய்யும்.

90% பணிகள் நிறைவு: கதவணையின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம், ஷட்டா் பொருத்தும் பணிகள், திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அலுவலா்களிடம் விரிவாகக் கேட்டறியப்பட்டு, கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில் தற்போதுவரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அமைச்சா்.

ஆய்வுக்கூட்டம்: தொடா்ந்து காக்காவாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை சாா்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் என். ஆனந்த் பேசுகையில், பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

குறிப்பாக, குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீா்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீா் சேமிப்பை அதிகரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

முதல்வரின் வளா்ச்சித் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மக்களையும் விரைவாகச் சென்றடையும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வுகளில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் மற்றும் நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் சிவக்குமாா், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கு. தனசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.