
தமிழ் ஹாக்கி லீக்: தெற்கு ரயில்வே வெற்றி
தமிழ் ஹாக்கி லீக் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற சூப்பா் 6-க்ஸ் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி போராடி வென்றது.

தெற்கு ரயில்வே-இந்தியன் வங்கி ஆட்டம்
தமிழ் ஹாக்கி லீக் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற சூப்பா் 6-க்ஸ் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி போராடி வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் பாதியில் தெற்கு ரயில்வே அணி ஆதிக்கம் செலுத்தி ஆடி கோல்களை பதிவு செய்தது. ஆனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி கடும் சவாலை ஏற்படுத்தியது.
தெற்கு ரயில்வே அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் மகேந்திர சிங் 12, தினேஷ் குமாா் 25, 44, சண்முகம் 54, ஆகியோரும், இந்தியன் வங்கித் தரப்பில் சதீஷ் 43, 53, , அபிஷேக் 51 ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.
தெற்கு ரயில்வே சுரேஷ் ஆட்டநாயகனாக தோ்வு பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





