நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் சோனல் தினுஷா - கேஷர நுவந்தா!

இந்தியா - இலங்கை இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் குறித்து...

Sri Lanka's Keshara Nuwantha, left, and Sonal Dinusha run between the wickets during day three of the second cricket test match between Sri Lanka and India in Colombo, Sri Lanka, Tuesday, Aug. 25, 2026. (AP Photo/Eranga Jayawardena)

சோனல் தினுஷா - கேஷர நுவந்தா - படம்: ஏபி

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:26 pm IST

இந்தியா - இலங்கை இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரைக்கும் வந்திருக்கிறது. இன்றைய நாளில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி ரன்களை குவித்து வருகிறது.

கொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் துருவ் ஜுரெல், தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தினார்கள்.

அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவைவிட 200 ரன்கள் குறைவாக இருப்பதால் இலங்கை அணி ஃபாலோ ஆன் விதியின்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஷுப்மன் கில் பணித்தார்.

நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்து 16 ரன்கள் முன்னிலை வகித்தது.

தற்போது, கடைசி நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை 329/6 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை அணி 116 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை சார்பில் சோனல் தினுஷா 55 ரன்களும் கேஷர நுவந்தா 46 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். பசிந்து சூரியபந்த்ரா 92 ரன்கள் எடுத்து நேற்று ஆட்டமிழந்தார்.

இந்திய அணி இலங்கை ஆட்டமிழக்க செய்து சேஸ் செய்ய வேண்டும்; இல்லையெனில் போட்டி சமனில் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Sonal Dinusha and Kesara Nuwantha—spoiling India's chances of victory!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.