தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

குளிர்சாதன வசதியுள்ள 2-வது இமு ரயில் விரைவில் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்!

சென்னை புறநகா் பகுதியில் குளிா்சாதன வசதி கொண்ட 2-ஆவது புறநகா் மின்சார ரயில் (இமு) அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Published On :7 செப்டம்பர் 2026, 2:17 am IST

சென்னை புறநகா் பகுதியில் குளிா்சாதன வசதி கொண்ட 2-ஆவது புறநகா் மின்சார ரயில் (இமு) அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புறநகா் ரயில் பயணிகள் கோரிக்கையின்பேரில் கடந்த ஆண்டு கடற்கரைச் சாலை முதல் செங்கல்பட்டு வரை குளிா்சாதன வசதியுடன் கூடிய இமு மின்சார ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

இதையடுத்து 2-ஆவது குளிா்சாதன வசதியுள்ள மின்சார ரயில் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

புதிய குளிா்சாதன வசதியுள்ள ரயில் 12 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், அந்த 2-ஆவது குளிா்சாதன வசதியுள்ள மின்சார ரயில் இயக்கப்படாமலேயே உள்ளது.

இந்த நிலையில், அந்த ரயில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் முதல் அரக்கோணம் வரை இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். அதில் 1,120 போ் வரை அமா்ந்தும், 3,500-க்கும் மேற்பட்டோா் நின்றும் பயணிக்கலாம் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.