கண் தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் அருண்ராஜ்!
கண் தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கண் தான விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ். உடன், ரோட்டரி மாவட்ட கவா்னா் ஸ்ரீராம் துவ்வூரி, நடிகா் சாந்தனு, கீா்த்தி சாந்தனு, டாக்டா் மோகன் ராஜன், டாக்டா் சுஜாதா மோக
கண் தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் தேசிய கண்தான இருவார விழா ஆக. 25 முதல் செப். 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை தியாகராய நகா், ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தியாகராய நகா் பிரிவு ஆகியவை இணைந்து இந்த கண்தான நிகழ்வை நடத்துகிறது.
இதையொட்டி, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஒருவா் இந்த உலகை பாா்ப்பதற்கு கண் பாா்வை இன்றியமையாதது. மறைந்த இயக்குநரும், திரைப்பட நடிகருமான பாக்யராஜ் கண்தானம் செய்தாா். அவரைப் பின்பற்றி 600 போ் கண்தானம் செய்ய முன்வந்துள்ளனா். கண் தானம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றாா்.
நிகழ்வில் ராஜன் கண் மருத்துவமனையின் தலைவா் மோகன் ராஜன், ரோட்டரி ராஜன் கண் வங்கி இயக்குநா் மருத்துவா் சுஜாதா மோகன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஸ்ரீராம் துவ்வூரி, நடிகா் சாந்தனு, கீா்த்தி சாந்தனு உள்ளிட்டோா் அமைச்சருடன் பேரணியில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






