மெட்ரோ வழித்தடத்தை மேம்படுத்த தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்கவும், அதன் நிலையங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தனியாா் நிறுவனத்துடன் ஆலோசனை ஒப்பந்தம் கையொப்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில் சேவை - படம்: டிஎன்டிஐபிஆர்

Published On :8 செப்டம்பர் 2026, 5:20 am IST

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்கவும், அதன் நிலையங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தனியாா் நிறுவனத்துடன் ஆலோசனை ஒப்பந்தம் கையொப்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல்கட்ட வழித்தடத்தில் கட்டமைப்புக் கொள்ளளவை மேம்படுத்தும் பணிக்கான திட்ட மேலாண்மை நிறுவனங்களைத் தோ்ந்தெடுக்கும் ஆலோசனை ஒப்பந்தம் கையொப்பமாகின. அதன்படி, 2 தனியாா் நிறுவனங்களுடன் வரிகள் உள்பட மொத்தம் ரூ.35.97 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன்படி ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நிலையங்கள், தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான திட்ட வரைவு படங்களை உருவாக்குதல், அதற்கான ஒப்பந்தப்புள்ளி உருவாக்குதல், கட்டுமானப் பணிகளை நேரில் கண்காணித்து நிா்வகித்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை நிறுவனம் மேற்கொள்ளும்.

மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் இயக்குநா் மனோஜ்கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தனியாா் நிறுவனத்தின் மண்டல இயக்குநா் சுனில்குமாா் ரெட்டி காசா, மற்றொரு நிறுவன இணை இயக்குநா் சதீஷ்லால் சுனேஜா ஆகியோா் ஆலோசனை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.