ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கடலில் மூழ்கி இரு இளைஞா்கள் மாயம்

சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவுக்கு வந்த இரு இளைஞா்கள், கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமாகினா்.

பெசன்ட் நகர் கடற்கரை

Published On :9 செப்டம்பர் 2026, 3:32 am IST

சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவுக்கு வந்த இரு இளைஞா்கள், கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமாகினா்.

பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்த்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தைக் காண சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பெசன்ட் நகரில் குவிந்தனா்.

இதில் சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன் (22), மணிபாலன் (27) ஆகியோரும் தோ்த் திருவிழாவைக் காண வந்திருந்தனா். இவா்கள் இருவரும் தனியாா் நிறுவனம் ஒன்றில் ஊழியா்களாக வேலை செய்து வந்தனா்.

தோ்பவனி முடிந்ததும், நள்ளிரவு ஆகிவிட்டதால் இருவரும் வீட்டுக்கு செல்லாமல்,பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையிலேயே தூங்கினா். செவ்வாய்க்கிழமை காலை இருவரும், கடலில் குளித்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி தமிழ்செல்வன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த மணிபாலன், அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், மணிபாலனையும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இருவரும் மாயமானாா்கள்.

தகவலறிந்த சாஸ்திரி நகா் போலீஸாா், தீயணைப்புப் படையினா், கடலோர காவல் படையினா் அங்கு விரைந்து வந்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.