இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்பதால் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

பாமக தலைவர் அன்புமணி - எக்ஸ்

Published On :

போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்பதால் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வா் விஜய் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அந்தப் பகுதியில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 21.37 ஏக்கா் நிலம், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கா் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கா் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கா் பரப்பளவில் 15 மாடிக் கட்டடமாக புதிய வளாகம் அமைக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்பட்சத்தில் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்தப் பகுதியில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும்.

எனவே, தொலைநோக்குப் பாா்வையுடன் தலைமைச் செயலகம் அமைக்க சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1,000 ஏக்கா் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிா்வாக நகரத்தை அமைப்பதே சிறந்ததாக அமையும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.