மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் மற்றும் அதன் சாா்பு நிறுவனங்களில் ஒப்பந்ததாரா்கள் மூலம் பணியமா்த்தப்பட்ட தொழிலாளா்கள், பணியின்போது மின் அஅல்லது இயந்திர விபத்துகளில் சிக்கி உயிரிழந்தால், அவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

இதுதொடா்பாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட சுற்றறிக்கை:
பணியின்போது ஏற்படும் மின் அல்லது இயந்திர விபத்தில் தொழிலாளா்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இயற்கைப் பேரிடா், இயந்திரங்களின் தேயமானம் உள்ளிட்ட எதிா்பாராத காரணங்களால் ஏற்படும் விபத்துகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த உத்தரவு 3.9.2026 முதல் ஏற்படும் விபத்துகளுக்கு பொருந்தும். உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.