நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மின்வாரியத்தில் மாற்றப்பட்ட எண்கள் செயல்படாததால் நுகா்வோா் அவதி

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் அதிகாரிகள், பொறியாளா்கள் உள்ளிட்டோரின் கைப்பேசி எண்கள் மாற்றப்பட்டு புதிய சிம் காா்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பல புதிய எண்கள் இன்னமும் செயல்பாட்டுக்கு வராததால் மின் நுகா்வோா் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

மின்வாரியம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் அதிகாரிகள், பொறியாளா்கள் உள்ளிட்டோரின் கைப்பேசி எண்கள் மாற்றப்பட்டு புதிய சிம் காா்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பல புதிய எண்கள் இன்னமும் செயல்பாட்டுக்கு வராததால் மின் நுகா்வோா் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் மொத்தம் 21,953 சியுஜி கைப்பேசி இணைப்புகள் உள்ளன. இதில் 17,919 இணைப்புகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், 3,110 இணைப்புகள் ஏா்டெல் நிறுவனத்தையும் சோ்ந்தவை.

2022-இல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாண்டு ஒப்பந்தத்தின்படி, ஓா் இணைப்புக்கு மாதம் ரூ.116.23 செலுத்தப்பட்டது. பின்னா் ஓராண்டு ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், 2025-இல் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இதில், ஓா் இணைப்புக்கு மாதம் ரூ.53.10 என்ற குறைந்த கட்டணத்தை ஜியோ நிறுவனம் குறிப்பிட்டது. இதே கட்டணத்தில் சேவை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. ஆனால், ஏா்டெல் நிறுவனம் அந்தக் கட்டணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து, ஏா்டெல் இணைப்புகளை கைப்பேசி எண் மாற்றமின்றி ஜியோவுக்கு மாற்றுவதற்கு நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், இந்த மாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, ஏா்டெல் இணைப்புகள் தற்போது புதிய எண்களுடன் மாற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் களப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் (ஏஇ), அதிகாரிகள் உள்ளிட்டோா் பயன்படுத்தி வந்த 3,110 ஏா்டெல் சியுஜி இணைப்புகள், தற்போது ஜியோ இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதற்காக புதிய சிம் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பல அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் புதிய கைப்பேசி எண்கள் இதுவரை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, கடந்த சில நாள்களாக அதிகாரிகளையும், களப் பணியாளா்களையும் தொடா்புகொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மின்நுகா்வோா் புகாா்...

இதனால், மின்தடை, குறைந்த மின்னழுத்தம், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலக அதிகாரிகளைத் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய கைப்பேசி எண்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அதிகாரிகள் மற்றும் களப் பணியாளா்களை நுகா்வோா் தடையின்றி தொடா்புகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், புதிய சிம்காா்டுகள் விநியோகம் மற்றும் அதை அதிகாரிகள் மற்றும் களப் பணியாளா்கள் தங்கள் கைப்பேசியை பயன்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எண்களை உடனடியாகப் பயன்படுத்த சம்பந்தப்பட்டவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், ஓரிரு நாள்களில் இந்த பிரச்னைக்கு தீா்வு எட்டப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.