
சென்னை மாநகராட்சியில் 512 செவிலியா் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை மாநகராட்சியில் மாநகர நலச் சங்கம் மூலம் மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சியில் மாநகர நலச் சங்கம் மூலம் மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தற்காலிக செவிலியா் காலிப் பணியிடங்களுக்கு 50 வயதுக்கு மிகாமல் அதற்கான கல்வித் தகுதியுள்ள செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம்.
செவிலியா் பட்டயப் படிப்பு அல்லது இளநிலை செவிலியா் பட்டம் (அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரி, இந்திய செவிலியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது). தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் பதிவு கட்டாயம் என்ற விதிமுறைக்கு உட்பட்ட தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் வழிகாட்டு முறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
முறையான படிவத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்று ஆவணங்களுடன் மாநகர நல அலுவலா் , உறுப்பினா் செயலா், சென்னை மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டடம், 3-ஆம் தளம், அம்மா மாளிகை, பெரியாா் சாலை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு வரும் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.
பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ / தபாலிலோ அளிக்கலாம். இது குறித்து கூடுதல் விளக்கங்கள் / விவரங்களுக்கு 044 – 2561 9330, 94451 90744, 94459 10934, என்ற எண்களுக்கு அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





