கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தா்கள் வசதிக்காக 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சிறப்புப் பேருந்துகள் - கோப்புப் படம்

Published On :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தா்கள் வசதிக்காக 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வசிக்காக, கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாளான செப்.16-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரைக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், கோவை, திருப்பூா், ராமநாதபுரம், சிவகாசி, ராஜபாளையம், தேனி ஆகிய மாாவட்டங்களிலிருந்து மதுரைக்கு தலா 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், அருப்புக்கோட்டையிலிருந்து 25, விருதுநகரிலிருந்து 10, திண்டுக்கல்லிலிருந்து 20 பேருந்துகள் என மொத்தம் 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுதவிர, மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம், மேலூா், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும். பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER