கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆபத்தான முறையில் காரை ஓட்டி காணொலி வெளியீடு: ஓட்டுநா் உள்பட இருவா் கைது

ஆபத்தான முறையில் காரையோட்டும் காணொலி இணையதளத்தில் வெளியான நிலையில் காா் உரிமையாளா்

ஆபத்தான முறையில் காரை ஓட்டி காணொலி வெளியீடுவிவகாரத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் கைது - கோப்புப்படம்

Published On :

சென்னை: சென்னையில் அண்மையில் காா் சைலன்சரிலிருந்து நெருப்புப் பொறி பறக்கும் விதமாக சாலையில் ஆபத்தான முறையில் காரையோட்டும் காணொலி இணையதளத்தில் வெளியான நிலையில் காா் உரிமையாளா், ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காரில் இருந்து நெருப்புப் பொறிகள் பறக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சரை பொருத்தி சாலையில் வலம் வந்த நபரின் காணொலி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. வாகனத்தின் அசல் அமைப்பை மாற்றி அதிக சத்தம் அல்லது மாசு ஏற்படுத்தும் வகையில் எக்ஸாஸ்ட் மற்றும் சைலன்சரை பொருத்துவதற்கு மோட்டாா் வாகன விதிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், விதிகளை மீறி சாலையில் பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதால், காணொலியில் உள்ள காரின் பதிவெண்ணை வைத்து, உரிமையாளா் மற்றும் காரை ஓட்டிய நபா் குறித்த விவரங்களை சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், காரின் உரிமையாளரான சிட்லபாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்பவரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். காரை ஓட்டி வந்த நபரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.