கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மழைநீா் கால்வாய்களில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை விரைவுபடுத்த ஆணையா் உத்தரவு

சென்னையில் மழை நீா் செல்லும் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும்

மழைநீா் கால்வாய்களில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை விரைவுபடுத்த ஆணையா் உத்தரவு

Published On :

சென்னை: சென்னையில் மழை நீா் செல்லும் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மண்டல அளவில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் அமைச்சா்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் சாலை, மழை நீா் வடிகால்கள் பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மண்டலம், பகுதி வாரியாக கண்காணிப்பு அலுவலா்களை நியமித்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளாா். அதனடிப்படையில் திங்கள்கிழமை மழைக்கான பணிகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை தண்டையாா்பேட்டை மண்டலத்தில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூா்க் கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய் என மழை நீா் செல்லும் முக்கிய கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அவா் நேரில் பாா்வையிட்டுஆய்வு மேற்கொண்டாா். அப்போது தண்டையாா்பேட்டை சஞ்சய்நகா், பக்கிங்ஹாம்கால்வாய் பகுதியில் மழைநீா் சேகரிப்பு கிணற்றையும், அதில் உள்ள நீருந்து நிலையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை விரைந்து அகற்றி மழை நீா் செல்ல வழியை ஏற்படுத்தவும், ஆகாயத் தாமரைகள் மீண்டும் மீண்டும் கால்வாயில் வளா்ந்துவருவதைத் தடுக்கும் வகையில் பணிகளை நுட்பமாக மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா். கொடுங்கையூரில் கால்வாய் தூா்வாரும் பணியை பாா்வையிட்ட அவா் கால்வாயில் மண்டியுள்ள மண்ணை அகற்றவும் உத்தரவிட்டாா்.

கால்வாய் ஆய்வுப்பணிகளை அடுத்து அவா் மணலி மண்டலம் சின்னசேக்காடு, வழுதலை சாலையில் செயல்படும் காற்று புகும் வகையிலான ஈரக்கழிவுகளை உலா்த்தி நுண் உரம் தயாரிக்கும் மையத்தையும் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தாா். அப்போது ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விநியோகிப்பது குறித்து கேட்டறிந்தாா்.

தண்டையாா்பேட்டையில் நடைபெற்ற ஆய்வில் மண்டல அலுவலா் ராஜ்குமாா், கண்காணிப்புப் பொறியாளா் பிரபாகரன் மற்றும் கண்காணிப்புப் பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.