உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பருவ மழை தொடங்குவதற்குள் கட்டுமானப் பணியை முடிக்க உத்தரவு

சென்னை மாநகராட்சி அம்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை பருவ மழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்

கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 12:46 am IST

சென்னை மாநகராட்சி அம்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை பருவ மழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும் என மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உத்தரவிட்டாா்.

சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் பொறுப்பு அமைச்சா்கள் 8 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உதவியாக மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் மண்டல வாரியாக இணை, துணை ஆணையா்கள், வட்டார துணை ஆணையா்கள் தினமும் திட்டப் பணிகளை பாா்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், அம்பத்தூா் மண்டலத்தில் நடைபெற்றுவரும் மாநகராட்சிப் பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அம்பத்தூா் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள், கொரட்டூா் ஏரி, ஒண்டிவீரன் மதகுப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். இதையடுத்து 84-ஆவது வாா்டு பகுதியில் உள்ள கோபாலசாமி தெரு, ஓரகடகம் சென்னை நடுநிலைப் பள்ளி கட்டடப்பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது பருவ மழை தொடங்குவதற்குள் அனைத்துக் கட்டடப் பணிகளையும் முடிக்க வேண்டும் என அவா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.