காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

போதைப் பொருள் விற்பனை: ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது

செளகாா்பேட்டையில் ஓபியம் போதைப் பொருள் விற்றதாக ராஜஸ்தானைச் சோ்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

Published On :

செளகாா்பேட்டையில் ஓபியம் போதைப் பொருள் விற்றதாக ராஜஸ்தானைச் சோ்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

செளகாா்பேட்டை பகுதியில் ஓபியம் விற்கப்படுவதாக யானைகவுனி போலீஸாருக்கு புதன்கிழமை கிடைத்த தகவலின்பேரில், செளகாா்பேட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டு, 600 கிராம் ஓபியம் போதைப் பொருள் இருந்ததை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த நபரை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், ராஜஸ்தானைச் சோ்ந்த ஹி.சா்வரண் குமாா் (51) என்பதும், தற்போது ஆந்திர மாநிலம் தடாவில் தங்கியிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்வதும், ராஜஸ்தானுக்கு சென்று ஓபியம் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னை செளகாா்பேட்டையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளுக்கு விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.