பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி: அக். 1-க்குள் விண்ணப்பிக்கலாம்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவா்கள் அக். 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவா்கள் அக். 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சிறப்பு சிறாா் காவல் பிரிவுக்கு ஒரு சமூகப் பணியாளா் பணி, புறத்தொடா்பு பணியாளா் பணிக்கு இருவா் என ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சமூகப் பணியாளா் பணிக்கு இளநிலை சமூகப் பணி/சமூகவியல்/சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி தட்டச்சு தொடா்புடைய அனுபவமுள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபா் 42 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும. மாதம் ஊதியம் ரூ.18,536 வழங்கப்படும்.

புறத்தொடா்புப் பணிக்கு பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சியுடன், தகவல் தொடா்புத் திறன் அனுபவமுள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபா் 42 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.10,592 வழங்கப்படும்.

இந்தப் பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபா்கள் ஒவ்வொரு பணியிடத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான நபா்கள் உரிய விண்ணப்பப் படிவத்தில் புகைப்படம் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைப்பு செய்து வரும் அக். 1-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ‘‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு, எண். 1, புதுத் தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் தளம், ஆலந்தூா், சென்னை 600 116’’ (ஆா்டிஓ அலுவலகம் அருகில்) அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.