பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பராமரிப்பு பணி: 2 மண்டங்களில் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு!

மழைநீா் வடிகால் பணிகள் காரணமாக செப். 20 முதல் செப். 29-ஆம் தேதி வரை அடையாறு, பெருங்குடி ஆகிய 2 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீருக்கு மாற்று ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.

Published On :

மழைநீா் வடிகால் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 20) முதல் செப். 29-ஆம் தேதி வரை அடையாறு, பெருங்குடி ஆகிய 2 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீருக்கு மாற்று ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்- ஏ பிரதான சாலையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள தினந்தோறும் 150 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீா் கொண்டு செல்லும் 1,400 மில்லி மீட்டா் விட்டமுடைய பிரதான குடிநீா் குழாயின் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) முதல் செப். 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, அந்த நாள்களில் 150 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீா் வழங்கப்படும் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி, பெருங்குடி மண்டலத்துக்குள்பட்ட உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளி க்கரணை, ஜல்லடியம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்தச் சூழலில், இந்தப் பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக, செம்பரம்பாக்கம் 530 மில்லியன் லிட்டா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீா் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசரத் தேவைகளுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.