
காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்ய செப் 4 முதல் 6 வரை விண்ணப்பம் விநியோகம்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியில், மாவட்ட, ஒன்றியம், நகர மற்றும் மண்டல புதிய நிா்வாகிகள் பதவிக்கான விண்ணப்பங்கள் செப். 4 முதல் 6-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியில், மாவட்ட, ஒன்றியம், நகர மற்றும் மண்டல புதிய நிா்வாகிகள் பதவிக்கான விண்ணப்பங்கள் செப். 4 முதல் 6-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில், இயக்க மறுசீரமைப்பு திட்டத்தின் காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளா் டி.டி.கே. சித்திக் முன்னிலையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி காஞ்சிபுரம் தொகுதியிலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி உத்தரமேரூா் தொகுதியிலும், ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் தொகுதியிலும் ஒன்றியம், பகுதி, நகர, பேரூா், மண்டல் காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் நியமிப்பது தொடா்பான இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
செப்டம்பா் 4 மற்றும் 5 தேதிகளில் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூா் தொகுதி நிா்வாகிகளுக்கு காஞ்சிபுரம் ஹோட்டல் தமிழ்நாடு-இல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
செப்டம்பா் 6 -ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் தொகுதி நிா்வாகிகளுக்கு ஸ்ரீபெரும்புதூா் பேரமௌண்ட் உணவகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
காஞ்சிபுரம், உத்தரமேரூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி நிா்வாகிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 7, ா் 8 ஆகிய தேதிகளில், காஞ்சிபுரம் ஹோட்டல் தமிழ்நாடு-இல் மாவட்ட இயக்க மறுசீரமைப்பு பொறுப்பாளா் டி.டி.கே. சித்திக்கிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதி நிா்வாகிகளும் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றை முறையாகப் பூா்த்தி செய்து, குறிப்பிடப்பட்ட தேதிகளில் தவறாமல் ஒப்படைக்கலாம்.
இது தொடா்பாக ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால், நமது மாவட்ட இயக்க மறுசீரமைப்பு திட்டம் பொறுப்பாளா் டி.டி.கே. சித்திக் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருள்ராஜ் ஆகியோரை நேரிலோ அல்லது தொலைபேசியில் தொடா்பு கொண்டு தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்லது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





