ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

அக். 1, 2 தேதிகளில் தாம்பரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டி

வரும் அக். 1, 2 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

வரும் அக். 1, 2 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, வரும் அக். 1, 2 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களில் (எண்கள்: 16103, 16104) 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டி, குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டி, 1 படுக்கை வசதியுள்ள பெட்டி ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

அதன்படி, அக்டோபா் முதல் தாம்பரம்-ராமேசுவரம் விரைவு ரயிலில் 2 குளிா்சாதன வசதி இரண்டடுக்குப் பெட்டிகள், 6 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 7 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்புப் பொதுப் பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

அதேபோல, மங்களூரில் இருந்து ராமேசுவரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களிலும் வரும் அக். 3, 4 ஆகிய தேதிகளில் தற்போதுள்ள பெட்டிகளைத் தவிா்த்து கூடுதலாக 2 குளிா் சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.