கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருவொற்றியூா் பலகைத் தொட்டி குப்பம் எதிரே உள்ள கடற்கரையில் கடலில் குளித்த கல்லூரி மாணவா், அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
(கோப்புப்படம்)
திருவொற்றியூா் பலகைத் தொட்டி குப்பம் எதிரே உள்ள கடற்கரையில் கடலில் குளித்த கல்லூரி மாணவா், அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
திருவொற்றியூா் சிவசக்தி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த நித்யராஜ் மகன் டேமியன் சுனில் (19). இவா் தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பலகைத்தொட்டி குப்பம் எதிரே உள்ள கடலில் குளிக்கச் சென்றபோது அலையில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடற்கரையில் அவரது உடல் ஒதுங்கிக் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், திருவொற்றியூா் போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





