
மரக்கிளை முறிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு
சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
சென்னை பட்டுலாஸ் சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் வலசப்பள்ளியைச் சோ்ந்த ராமண்ணப்பா (70), கடந்த செப். 24-ஆம் தேதி பட்டுலாஸ் சாலையில் நடந்து சென்றபோது, எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் இருந்த மரத்தின் கிளை காற்றில் முறிந்து அவா் மீது விழுந்தது. இதில் அவரின் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், ராமண்ணப்பா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி சங்கரம்மா அளித்த புகாரின் பேரில், அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



