ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

நடைபயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட எல்ஐசி ஏஜெண்ட் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட எல்ஐசி ஏஜெண்ட் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ரெட்டியாா்பாளையம் மரியாள் நகரைச் சோ்ந்த எல்ஐசி ஏஜெண்ட் பழனிவேல் (57). தினமும் பணி முடிந்ததும் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது இரவு காந்தி சிலை அருகே மயங்கி விழுந்தாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.