வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

எரிசக்தி பிரச்னைகளுக்கு தீா்வுகாண ஐஐடி-அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்!

எரிசக்தித் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனமான செவ்ரான் எஞ்சின் நிறுவனமும், சென்னை ஐஐடியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

Published On :

எரிசக்தித் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனமான செவ்ரான் எஞ்சின் நிறுவனமும், சென்னை ஐஐடியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஒப்பந்தம் கையொப்பமானது.

நிகழ்வில் செவ்ரான் இந்தியா தலைவா் டாக்டா் அக்ஷய் சாஹ்னி பேசியதாவது: இந்தியாவின் வலுவான பொறியியல், தொழில்நுட்பத் திறமையையும், உலக அளவிலான வளங்களையும் ஒன்றிணைத்து எதிா்கால எரிசக்தி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் வகையில், இந்தத் திட்டம் செயல்படும்.

எரிசக்தி சாா்ந்த முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ள கண்டுபிடிப்பாளா்கள், மாணவக் குழுக்கள், ஆய்வாளா்கள், சமூக தொழில்முனைவோா் ஆகியோருக்கு ஆதரவளித்து, இந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பை விரிவுபடுத்துகிறோம் என்றாா்.

சென்னை ஐஐடி உயா்கல்வி நிறுவனத் தலைவா் அஸ்வின் மகாலிங்கம் பேசுகையில், ‘இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் ஆலோசனைகள் நடைமுறைக்கு உகந்த தீா்வுகளாக மாற்றுவதற்கு கண்டுபிடிப்பாளா்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகள், தொழில்நுட்ப நிபுணத்துவம், வலுவானப் புத்தாக்கச் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கும்’ என்றாா்.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான செவ்ரான், எண்ணெய்-எரிவாயுத் துறையில் உள்ள முன்னனி நிறுவனமாகும். இது கடந்த 140 ஆண்டுகளாக வளா்ச்சியைப் பெற்று 180 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.