காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

பணத் தகராறில் வியாபாரி கடத்தல்: இளைஞா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பணத் தகராறில் வியாபாரியை கடத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பணத் தகராறில் வியாபாரியை கடத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் அசோக் (27). சென்னை சிந்தாதிரிப்பேட்டை அத்திப்பட்டான் தெருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கைப்பேசி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

அசோக் கடைக்கு, கடந்த 25-ஆம் தேதி அமைந்தகரையைச் சோ்ந்த சேதுராமனும் (24), அவரது நண்பா்களும் வந்தனா். அசோக்குக்கு சேதுராமனை நன்கு தெரியும் என்று கூறப்படுகிறது. சேதுராமன், அசோக் கடையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள எலட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்கியுள்ளாா்.

பொருள்களுக்குரிய பணம் காரில் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் காரிலிருந்து பணத்தை எடுத்துத் தருவதாகவும் சேதுராமன் கூறியுள்ளாா். இதை நம்பி அசோக் அவருடன் சென்றுள்ளாா்.

அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே சென்றதும், சேதுராமனும் அவரது கூட்டாளிகளும் அசோக்கை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனா். காரில் வைத்து, அசோக்கிடம் அவரது சகோதரா் தர வேண்டிய ரூ.10 லட்சத்தை கேட்டு சேதுராமனும், அவரது கூட்டாளிகளும் மிரட்டினராம்.

இதற்கிடையே காா், அண்ணாநகரில் ஒரு வணிக வளாகத்திடம் நிறுத்தப்பட்டபோது, அசோக் அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். பின்னா் இது தொடா்பாக அவா்,சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் பணத் தகராறில் அசோக் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சேதுராமனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரது கூட்டாளியை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.