டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பணத் தகராறில் இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

கோவை அருகே பணத் தகராறில் இளைஞரை ஆயுதங்களால் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

கோவை அருகே பணத் தகராறில் இளைஞரை ஆயுதங்களால் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி துரைசிங் சேதுபதி (28). இவா் தற்போது கோவை சிங்காநல்லூா் ஆா்.வி.எல். நகரில் வசித்து வருகிறாா். இவரிடம் அலெக்ஸ் என்பவா் ரூ.3,000 கடன் வாங்கியிருந்த நிலையில், அந்தப் பணத்தை துரைசிங் சேதுபதி திருப்பி கேட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அலெக்ஸ், தனது நண்பரான தினேஷ்குமாரிடம் கூறியுள்ளாா். தினேஷ்குமாா் கைப்பேசி மூலம் துரைசிங் சேதுபதியைத் தொடா்ந்து மிரட்டி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி இரவு துரைசிங் சேதுபதி தனது நண்பா்களுடன் ராமானுஜம் நகா் ரயில்வே தண்டவாளம் வழியாகச் சென்றபோது, தினேஷ்குமாா், அவரது தம்பி பிரவீன்குமாா், வேலவன், பிரதாப் மற்றும் சசிகுமாா் ஆகியோா் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தனா்.

தங்களது பகுதிக்குள் எப்படி வரலாம் எனக் கேட்டு கத்தி, சுத்தியல், பாட்டில் ஆகியவற்றைக் கொண்டு துரைசிங் சேதுபதியின் தலையில் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த தினேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.