மாமல்லபுரத்தில் உள்ள பெருமாளேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் பி.ஏ.எஸ்வந்த்ராவ் பெருமாளேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவராக பதவி ஏற்றார். அவருக்கு வங்கிச் செயலர் எஸ்.ஏழுமலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் வங்கியின் துணைத் தலைவராக இ.தனலட்சுமி, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக என்.பத்மாவதி, டி.மல்லிகா, ஆர்.பிரகாசம், எம்.சேகர், எம்.பி.பிரகாஷ், வி.செüந்தரராஜன், கே.கணபதி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








