டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தடுப்புக் காவல் சட்டத்தில் மேலும் 2 பா.ம.க.வினர் கைது

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :13 மே 2013, 12:41 am IST

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

 பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசு பஸ்ûஸ, காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.

 இது தொடர்பாக பா.ம.க.-வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் இளங்கோ (31), முருகேசன் மகன் மாரி (29) உள்பட 12 பேரை பாலுச்செட்டிசத்திரம் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

 இந்த வழக்கு தொடர்பாக தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை, தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்நிலையில் இதே வழக்கு தொடர்பாக இளங்கோ, மாரி ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார்.

இதன் பேரில், அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோ, மாரி ஆகியோரைப் போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.