காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசு பஸ்ûஸ, காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.
இது தொடர்பாக பா.ம.க.-வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் இளங்கோ (31), முருகேசன் மகன் மாரி (29) உள்பட 12 பேரை பாலுச்செட்டிசத்திரம் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை, தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்நிலையில் இதே வழக்கு தொடர்பாக இளங்கோ, மாரி ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார். இதன் பேரில், அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோ, மாரி ஆகியோரைப் போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


