சேறும், சகதியுமான ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலை
புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலை சேறும்,


புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலை சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்
ரூ. 101.38 கோடி மதிப்பில் புதை சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதை சாக்கடை, குடிநீர்த் திட்டத்துக்காக ஸ்ரீபெரும்புதூரில் 15 வார்டுகளிலும் பள்ளங்கள் தோண்டி குடிநீர்க் குழாய்கள், புதை சாக்கடை திட்டத்துக்காக கழிவுநீர் குழாய்கள் பூமியில் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், பேரூராட்சிக்கு உள்பட்ட பல தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாததால் அவ்வப்போது பொழியும் சிறுமழைக்குக் கூட தெருச்சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் காந்தி சாலை, தேரடி, திருவள்ளூர் சாலைகளில் தற்போது புதை சாக்கடை திட்டத்துக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறன. பணி முடிந்து தோண்டப்பட்ட பள்ளங்கள் சரவர மூடப்படாததால் சாலையிலேயே மலை போல் மண் குவிக்கப்பட்டிருப்பதால் மழைநேரங்களில் மண் கரைந்து சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால் காந்தி சாலை சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே வளர்ச்சிப் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களை முறையாக மூடவும், சாலையில் தேவையில்லாமல் குவிக்கப்பட்டுள்ள மண் குவியல்களை அகற்றவும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...