மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட இல்லீடு கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட இல்லீடு கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

சூனாம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட இல்லீடு கிராமத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. வழங்கும் குடிநீரும் சுகாதாரமற்றதாக உள்ளது. அதனை பயன்படுத்திய மக்களுக்கு மர்மக் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சீரான குடிநீர் வழங்காத சூனாம்பேடு ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக் குடங்களுடன் புதுச்சேரி-மதுராந்தகம் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியல் செய்தனர். மண் பானைகளை சாலையில் போட்டு உடைத்தனர். தகவல் அறிந்த சூனாம்பேடு காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இ.சி.ஆர். சாலையில்...

மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மணமை ஊராட்சியில் சீராக குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் இ.சி.ஆர் சாலையில் சனிக்கிழமை மறியல் செய்தனர். 

மணமை கிராம ஊராட்சி 3-ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாள்களாக தெருக்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மணமை ஊராட்சி, திருக்கழுகுன்றம் ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் பிரச்னை தீராததால் 3-ஆவது வார்டு பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து  சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி  சக்கரவர்த்தி, ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட காவல் துறையினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர்  வீ.கிட்டு, 3-ஆவது வார்டு ஊராட்சி உறுப்பினர் தனசேகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து திருக்கழுகுன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனையடுத்து திங்கள்கிழமைக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் மீண்டும் இ.சி.ஆர். சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.