மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் எம்.துரைராஜ் ஸ்தபதிக்கு சிறந்த சிற்பக்கலை ஏற்றுமதியாளருக்கான விருதினை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியிலுள்ள மயன் சிற்பக்கலைக் கூடத்தின் இயக்குநர் எம்.துரைராஜ் ஸ்தபதி. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, மலேசியா, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், அந்தமான், ஸ்விட்சர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அங்குள்ள இந்துக் கோயில்களில் அமைக்க சாமி சிலைகளை வடித்து ஏற்றுமதி செய்துள்ளார். அங்கு இந்துகோயில்களையும் கட்டி திருப்பணியும் செய்துள்ளார்.
சிற்பக்கலையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள எம்.துரைராஜ் ஸ்தபதி, இதற்கு முன் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரால் பாராட்டப்பட்டு சிறந்த சிற்பக் கலைஞருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.
தற்போது தமிழக அரசு சிறந்த சிற்பக்கலை ஏற்றுமதியாளருக்கான விருதினை வழங்கி கெரவித்துள்ளது.
சென்னையில் நடந்த விழாவில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் மோகன், சிற்பக்கலை ஏற்றுமதியாளர் விருது, ரூ. 40,000 பரிசு தொகை ஆகியவற்றை ஸ்தபதி எ.துரைராஜிக்கு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்னும் ஜெயலலிதாவின் படத்தைதான் வைத்திருக்கிறார் செங்கோட்டையன்; ஆனால் ஓபிஎஸ்..! ராஜ்மோகன்

முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!

தமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள், அதற்காக துதி பாடத் தேவையில்லை! ஓபிஎஸ் vs செங்கோட்டையன்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


