மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விபத்தில் இளைஞர் சாவு

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர், வாலாஜாபாத் பகுதிகளில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் உயிரிழந்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 9:58 pm

DIN

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர், வாலாஜாபாத் பகுதிகளில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெங்களத்தூரைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (35). இவர் காஞ்சிபுரத்திலிருந்து வெங்களத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் தனது மனைவி சித்ராவுடன் புதன்கிழமை சென்றுள்ளார். கீழ்கதிர்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் கோதண்டராமன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கோதண்டராமனையும், லேசான காயமடைந்த அவரது மனைவியையும் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோதண்டராமன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலுசெட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி பகுதியைச் சேர்ந்தவர் தாந்தோனி அம்மாள் (45). இவர் வாலாஜாபாத்திலிருந்து தென்னேரியை நோக்கி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே சென்றபோது, கல் தடுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
தொடர்ந்து, சுய நினைவின்றி இருந்த அவர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நவம்பர் 8- ஆம் தேதி சுயநினைவு வந்த போது, அவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரியைச் சேர்ந்தவர் எனக் கூறிவிட்டு உயிரிழந்தார். இது குறித்தபுகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.