படகிலிருந்து கடலில் விழுந்தவரின் சடலம் மீட்பு

மாமல்லபுரம் அருகே படகிலிருந்து கடலில் தவறி விழுந்தவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. 
Updated on
1 min read

மாமல்லபுரம் அருகே படகிலிருந்து கடலில் தவறி விழுந்தவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. 
சென்னை பாலவாக்கம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயரத்தினம் (55). இவர், கடந்த 14-ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக பாலவாக்கம் கடலுக்கு படகில் சென்றுள்ளார். அப்போது படகில் இருந்து கடலில் தவறி விழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலில் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை அருகில் கரையில் ஆண் சடலம் ஒன்று வியாழக்கிழமை ஒதுங்கியது. தகவலறிந்து சென்ற மாமல்லபுரம் போலீஸார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் பாலவாக்கம் கடலில் தவறிவிழுந்த விஜயரத்தினம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com