மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பல்கலை. கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரர் ஆசி!

சங்கரா பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை ஆசி வழங்கினார். 

News image

விஜயேந்திரரிடம் அருளாசி பெற்ற மாணவர்கள்.

Updated On :6 ஏப்ரல் 2018, 2:51 am IST

சங்கரா பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை ஆசி வழங்கினார். 
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகம் சார்பில், மாநில அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டன. இதில், இறுதிப்போட்டியில் சங்கரா பல்கலைக்கழக அணியும், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக அணியும் மோதின. போட்டியில், வெற்றி பெற்ற வீரர்கள் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து, மாநில அளவில் கிரிக்கெட், கைப் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பரதநாட்டிய போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி காவ்யா ஆகியோருக்கு அருளாசி வழங்கினார். அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் விஷ்ணு போத்தி, பதிவாளர் சீனிவாசு, முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், டீன்கள் ரமணகுமார், பாலாஜி, ஸ்ரீராம், கலைத்துறை இயக்குநர் வெங்கட்ராமன், உடற்கல்வித் துறை இயக்குநர் குணாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.