மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

20 நாள் பெண் குழந்தை கோயில் அருகே கண்டெடுப்பு

செய்யூரை அடுத்த முட்டுக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் அருகே பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தை செங்கல்பட்டு சமூக

Updated On :9 ஏப்ரல் 2018, 9:49 pm

செய்யூரை அடுத்த முட்டுக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் அருகே பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தை செங்கல்பட்டு சமூக நலத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
செய்யூர் வட்டம், முட்டுக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் பிறந்து 20 நாள் ஆன பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது. அழுது கொண்டிருந்த அக்குழந்தை குறித்து அந்த வழியாக வந்த மக்கள் செய்யூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் செங்கல்பட்டு சமூக நலத் துறைக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.
செங்கல்பட்டு அரசு நலத்துறை ஊழியர்கள் நேரில் வந்து அந்த குழந்தையை பெற்றுக் கொண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். 
அந்தக் குழந்தையின் தாயார் பற்றிய விவரங்களையும், எதற்காக இங்கு வந்து குழந்தையை வைத்துச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.