வீட்டுக்குள் புகுந்த விஷப் பாம்பு: தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
வீட்டினுள் புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பை தீயணைப்புத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர்.
வீட்டினுள் புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பை தீயணைப்புத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர்.
காஞ்சிபுரம் நகராட்சி குப்பைக் கிடங்குக்கு அருகே அல்லாபாத் ஏரி உள்ளது. ஏரிக்கு அருகில் புதர் மண்டி நிறைந்து காணப்படுகிறது. அதோடு, மஞ்சள்கால்வாய் பகுதியையொட்டி சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளதால், அருகில் இருக்கும் தெருக்களில் அவ்வப்போது விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அல்லாபாத் ஏரிக்கு அருகில் உள்ள சிஎஸ்ஐ செட்டித் தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்குள் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை புகுந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலையப் பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்பு, அவர்கள் பாம்பை தேடிப் பார்த்ததில், அத்தெருவாசி ஒருவரின் படுக்கை அறையில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.
பாம்பு பிடிக்கும் கருவிகள் மூலம் விரைந்து செயல்பட்டு அப்பாம்பை சாமர்த்தியமாகப் பிடித்தனர். தீயணைப்புத் துறையினரால் பிடிபட்ட அப்பாம்பு 5 அடி நீளம் கொண்ட அரிய வகை கண்ணாடி விரியன் இனத்தைச் சேர்ந்தது.
இது கொடிய விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. குறித்த நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே, அப்பகுதியினர் தீயணைப்புத் துறையின் துரித செயல்பாட்டைப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

