நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

நீலமங்கலம் பகுதியில் ரூ.10 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்

ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நீலமங்கலம் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, அவை திங்கள்கிழமை இயக்கி

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 4:13 am IST


ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நீலமங்கலம் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, அவை திங்கள்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.
குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக குறைந்த மின்னழுத்த மின்சாரமே வழங்கப்பட்டு வந்தது. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
அதை ஏற்று, நீலமங்கலம் கிராமத்திற்குட்பட்ட ஜீவா நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 10 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. அந்த மின்மாற்றிகளை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மணிமங்கலம்-படப்பை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர் என்.டி.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தேச
அபிமானன் கலந்துகொண்டு புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் சிவகுமார், வனக்குழு தலைவர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.