இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பதவியை நிரப்பக் கோரிக்கை

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பதவியை நிரப்புமாறு கல்வித் துறையைச்

Updated On :26 டிசம்பர் 2018, 3:14 am IST


அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பதவியை நிரப்புமாறு கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 105 நடுநிலைப்பள்ளிகளும், தொடக்கப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-1, 2 என இரு அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-1-இல் தற்சமயம் ஷகிலா என்பவர் பணியாற்றி வருகிறார். 
கடந்த 8 மாதங்களுக்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்-2 பதவியில் இருந்த ஜெய்சங்கர் உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். அவருக்குப் பின் இதுவரை அந்தப் பணியிடத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. காலியாக உள்ள அப்பணியை நிரப்பாததால், பள்ளி மாணவர்களின் திறன், பள்ளிகளின் நிர்வாகப் பணிகள், ஆசிரியர்களின் பணிகள், பள்ளிகளின்ஆய்வுப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார கல்வி அலுவலர் நிலை-1 பணியில் உள்ள ஷகிலா தனது உடல்நிலை மற்றும் அவசரத் தேவைக்காக விடுப்பு எடுக்கும் காலங்களில் தமது பள்ளிகளின் தகவல்கள், விடுப்புகள், பணப்பலன் போன்ற அனைத்து பணிகளும் தொய்வு ஏற்படுகிற நிலை உள்ளது. 
எனவே 8 மாதங்களாக காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் நிலை-2 பணியிடத்தை நிரப்பி ஆசிரியர்கள், மாணவர்களின் நலன்களைப் பேணுமாறு கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.