கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Updated on
1 min read

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இது குறித்த விவரம்: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி நிகழாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. தொடர்ந்து, ஜூலை 27ஆம் தேதி பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பட்டயப் பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சவயதும் 17 வயது (2018, ஜூன் 1ஆம் தேதிக்குள்) பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. 
பட்டயப் பயிற்சியின் காலம் 36 வாரங்கள் கொண்டது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.14, 850-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
பயிற்சிக்கான விண்ணப்பங்களை பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் - 5 ஏ, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் - 631501 (தொலைபேசி: 044-27237699) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com