சென்ட்ரிங் பலகைக் கிடங்கில் தீ விபத்து: மரப் பலகைகள் நாசம்
வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் சென்ட்ரிங் பலகைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப்பலகைகள் தீயில் எரிந்து நாசமாகின.


வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் சென்ட்ரிங் பலகைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப்பலகைகள் தீயில் எரிந்து நாசமாகின.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், கம்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்(58). இவர் சென்டரிங் பலகைகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இதற்காக மணிமங்கலத்தை அடுத்த வரதராஜபுரம், மகாலஷ்மி நகர் பகுதியில் பலகைகளை இருப்பில் வைப்பதற்கான கிடங்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில், தனசேகருக்குச் சொந்தமான சென்ட்ரிங் பலகைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப்பலகைகள் தீயில் எரிந்து நாசமாகின.
இவ்விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...