புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தொழிலாளர் நல வாரியம்: ஓய்வூதியம் பெறுவோர் ஏப்.30-க்குள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஓய்வூதியம் பெறுவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 10:47 pm

ஓய்வூதியம் பெறுவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட 15 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெறுவோர் அவசியம் ஓய்வூதியச் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, காஞ்சிபுரத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையகத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள், ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, ஓய்வூதியதாரர்கள் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் அரசிதழ் பதிவு பெற்ற மத்திய மாநில அரசு அதிகாரியால் ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு பின் வழங்கப்பட்ட ஆய்வு சான்றை, தொழிலாளர் உதவி ஆணையரகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) 46பி-2, விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம் அருகில், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும். 
ஓய்வூதியதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்தால், அதற்கான சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.