
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்துக்கு ஆதரவு : தொல்.திருமாவளவன்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேட்டுக்கு புதன்கிழமை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அறவழிப் போராட்டம் நியாயமானது. அரசு கொடுத்து இருந்த வாக்குறுதிக்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருந்தனர். ஆனால் போராட்டத்தை நசுக்கவேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்தது வேதனை அளிக்கிறது. எனவே, புதிய பென்ஷன் திட்டத்தை அரசு கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 3 மாதங்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவை அளிக்கும். நீட் தேர்வு என்ற பெயரால் பயங்கரவாதிகளை சோதனை செய்வது போல, தமிழக மாணவ, மாணவிகளை சோதனை செய்தது வெட்கக்கேடான செயல் என்றார்.
அப்போது கட்சியின் மாவட்டச் செயலர் ஆதவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




