புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு: ஏராளமானோர் பங்கேற்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 94ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய உரையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றை முன்னிட்டு,

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:48 pm


ஆர்எஸ்எஸ் அமைப்பின் 94ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய உரையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, ஊரப்பாக்கத்தில் அந்த அமைப்பின் தொண்டர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
விவேகானந்தர் ஒருங்கிணைந்த தேசபக்தியும், தொண்டுள்ளம், கூடிய சமுதாயம் நம் நாட்டில் அமைய வேண்டும் என்று விரும்பியதால் ஹெட்கேவர் அதே நோக்கத்தோடு சமுதாயத்தை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு விஜயதசமி அன்று தொடங்கப்பட்டதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 94 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மேலும், விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உரையாற்றி 125 ஆண்டு நிறைவடைந்துள்ளன. இந்த இரு நிகழ்வுகளையும் நினைவுகூரும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஊரப்பாக்கத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு தொடங்கினர். அவர்கள் ஊரப்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக ஐயஞ்சேரி உள்ளிட்ட முக்கிய கிராமப்புறப் பகுதிகள் வழியாக மீண்டு பள்ளியை வந்தடைந்தனர். அணிவகுப்பு ஊர்வலத்தில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பெருங்களத்தூர், மறைமலைநகர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
இதனிடையே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் செங்கல்பட்டு நகரில் செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில் அருகில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு கோகுலாபுரம், பாரதியார் வீதி, ஜிஎஸ்டி சாலை வழியாக அண்ணாநகரில் உள்ள விவேகானந்தர் பள்ளியில் முடிவடைந்தது. 
முன்னதாக ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஐயப்பன் அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வழக்குரைஞர் வி.ஆர்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வடதமிழகப் பொறுப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.