குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

சவ்வுடுமண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

முறையான பாதுகாப்பு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சவ்வுடுமண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


முறையான பாதுகாப்பு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சவ்வுடுமண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் கடந்த சில தினங்களாக தனியார் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மண் குவாரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த மணல் குவாரியில் இருந்து லாரியின் அளவை விட அதிக அளவில் சவ்வுடு மண் ஏற்றும் லாரிகளின் ஓட்டுநர்கள் லாரியில் தார்ப்பாய் போட்டு மூடாமல் எடுத்துச்செல்கின்றனர்.
இதனால் லாரிகளில் கொண்டு செல்லப்படும் சவ்வுடு மண் சாலையில் கொட்டி வருவதால், லாரிகளுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதேபோல் சாலையில் சிதறும் மண் துகள்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 
இதனால் சவ்வுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் முறையாக தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமான மண் எடுத்துச் செல்லும் லாரிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.