
அறிவிப்புப் பலகைகள் இல்லாமல் சாலை விரிவாக்கப் பணி: விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டுநர்கள்
ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள், ஒளி
ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள், ஒளி உமிழ்வான்கள் வைக்காததால் வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ. 7.68 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.நெரிசலைக் கட்டுப்படுத்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகில் இருந்து பிள்ளைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு இருவழிச் சாலையில் இருந்து நான்குவழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இச்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
சாலை விரிவாக்கத்திற்காக அறிவிப்புப் பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் ஏதும் வைக்கப்படாமல் சாலைத் தடுப்புகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் வைக்குமாறும், சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



