
மனுநீதிநாள் முகாமில் 70 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட வைப்பூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 70
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட வைப்பூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 70 பயனாளிகளுக்கு ஆட்சியர் பா.பொன்னையா நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்குள்பட்ட வைப்பூர் ஊராட்சியில் புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்து, 8 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 7 பெண்களுக்கு விதவை உதவித் தொகை, ஒருவருக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார். அதுபோல், 12 பேருக்கு பட்டா, 13 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 8 பேருக்கு மாவட்ட பழங்குடியினர் அடையாள அட்டை, 6 பேருக்கு வேளாண்மைத் துறை சார்பில் தென்னங்கன்று மற்றும் விதை, தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி விதை தொகுப்பு பை 2 பேருக்கு என மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 1.92 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி, வருவாய் கோட்டாட்சியர் ராஜு, தனித் துணை சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதாபானுமதி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






