மதுராந்தகம் அருகே, கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் பருவ கால மாற்றமும், மனித ஆரோக்கியமும் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளம்பாக்கம்-படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உயிரி தொழில் நுட்பத் துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்க நிகழ்ச்சியில், கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் காசிநாதபாண்டியன், ஆலோசகர் ரவிச்சந்திரன், டீன் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தைவான் மருத்துவப் பல்கலைக்கழக உயிரி மருத்துவ அறிவியல் துறையின் தலைவரும், பேராசியருமான ஹேன்ஸ் உவே பாம்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமது ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்.
பின்னர் கருத்தரங்க மலரை பேராசிரியர் ஹேன்ஸ் உவே பாம்ஸ் வெளிட்டார். அதனை கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்


