பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்புகள் மேம்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை
நிறைவுபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தூயகொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட 4 நாள் பயிற்சி முகாமில் காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுகுன்றம், உத்திரமேரூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 89 பள்ளிகளில் இருந்து 89 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இதில், வகுப்பறை செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் தலைமைப் பண்புகளை வளர்த்தல், சமுதாய நலனில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜ், இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் வட்டார மேற்பார்வையாளர் அமலா பிரஜித், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், வட்டாரப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எச். தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








