தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்புகள் மேம்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:46 am IST

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்புகள் மேம்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை 
நிறைவுபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தூயகொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட 4 நாள் பயிற்சி முகாமில் காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுகுன்றம், உத்திரமேரூர் ஒன்றியங்களைச் சேர்ந்த  89 பள்ளிகளில் இருந்து 89 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.  இதில், வகுப்பறை செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் தலைமைப் பண்புகளை வளர்த்தல், சமுதாய நலனில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜ், இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் வட்டார மேற்பார்வையாளர் அமலா பிரஜித்,  மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், வட்டாரப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எச். தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.